மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் 130 மனுக்கள் பெறப்பட்டது: காஞ்சிபுர சரக டிஐஜி பங்கேற்பு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட மக்கள் தங்களது குறைகளையும், முடிக்கப்படாமல் உள்ள வழக்குகளையும் புகார்களாக தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் எஸ்.பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறறது. இதில் காஞ்சி சரக டிஐஜி சத்யப்ரியா, எஸ்பி கல்யாண், டிஎஸ்பி சந்திரதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

பொது மக்களின் முக்கிய கோரிக்கைகள், முடிக்கப்படாமல் உள்ள புகார்களை முடிக்க கோரியும், நிலம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் கோரி மனுக்களை அளித்தனர்.  அதே போல் செல் போன் தொலைந்து போனதாகவும் அதனை கண்டுபிடித்து தருமாறும் புகார் மனுக்களை அளித்தனர். மொத்தமாக 130 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என டிஐஜி சத்ய ப்ரியா, மாவட்ட எஸ்பி பா.சிபாஸ் கல்யாண்-க்கு உத்தரவிட்டார்.

Related Stories: