கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா: 26ம் தேதி முதல் அக்.4 ம் தேதி வரை நடைபெற உள்ளது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் நவராத்திரி பெருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு 9 நாட்களும் அம்மன் பல்வேறு அலங்காரத்திலும் மூலவர் பல்வேறு காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி வருகின்ற 26ம் தேதி ஆதி பராசக்தி மஞ்சள் காப்பு நிகழ்ச்சியும், 27ம் தேதி மீனாட்சி குங்குமம் காப்பும், 28 ந் தேதி ராஜேஸ்வரிக்கு சிகப்பு குங்குமம் காப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அதே போல் 29 ந் தேதி மகாலட்சுமி சந்தனகாப்பும், 30ம் தேதி மாவடி பச்சை குங்கும காப்பும், அக்டோபர் 1ம் தேதி சரஸ்வதி மாவு காப்பும், 2ம் தேதி அன்னபூரணி ரோஸ் குங்குமம் காப்பும், 3ம் தேதி இரத சாரதிக்கு வெள்ளி கவசம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவின் கடைசி நாளான மகிஷாசூரமர்தினிக்கு மஞ்சள் காப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 5ம் தேதி விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு அன்று காலை 9 மணியளவில் சிறப்பு அபிேஷகமும், ஆராதனையும் , வருகின்ற அக்டோபர் 9 ம் தேதி அம்மன் அலங்காரம் விடையாத்தி - சந்தனகாப்பு  நிகழ்ச்சியும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: