×

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 கிராம மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு: 58வது நாளாக தொடரும் போராட்டம்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 58வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அப்பகுதியை சேர்ந்த 4 கிராம பள்ளி மாணவ, மாணவிகள் 400 பேர் போராட்டத்தில் பங்கேற்று ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் இணைந்து இரண்டாவது விமான நிலையம் அமைக்க அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்காக, 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது. இதில், நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளதால் இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாள்தோறும் இரவு நேரங்களில் 58வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக இவர்களிடம் குறைகளை கேட்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாள்தோறும் அப்பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் சந்தித்து உரையாடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை நேற்று திடீரென அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், விவசாயிகள் தங்கள் விலை நிலங்களை விற்பதற்கு மாவட்ட கலெக்டரின் தடை தடையில்லா சான்று பெற வேண்டும் என அறிவிக்கப்பட்ட து. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர். எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. மாவட்ட கலெக்டரிடம் நாள் கணக்கில் காத்து நிற்கும் நிலையில் ஏற்படும்.

ஆகவே, இந்த அறிவிப்பை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இன்று 58வது நாள் போராட்டமாக ஏகானாபுரம், நெல்வாய், மேலேறி, நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் நாங்கள் பிள்ளைகளை இன்று முதல் பள்ளிக்கு அனுப்பபோது இல்லை என்று தங்களுடைய போராட்ட யுக்திளை 4 கிராம மக்கள் மாற்றி உள்ளனர். 4 கிராமங்களில் உள்ள 3 தொடக்க பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி என 400 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு போகமால் தங்களுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Tags : Bharandur airport , 4 village students boycott school to protest Parantur airport: Protest continues for 58th day
× RELATED பரந்தூர் விமான நிலையத்திற்கு...