×

காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றித் திரிந்த நாய்கள் பிடிப்பட்டன: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் நாய்களால் பெரும் மச்சம் அடைந்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க குறைதீர் மையம் மற்றும் கட்டணம் இல்லா தொலைபேசி எண் மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என அறிவித்து தொடங்கியது. துவக்க விழாவில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இதன் செயல்பாட்டை ஆய்வு செய்யும் வகையில் தனது தொலைபேசியில் இருந்து கட்டணமில்லா தொலைபேசி எண் புகார் தெரிவிக்க அழைத்து, அங்குள்ள ஊழியர் குறைகளை கேட்டார்.

அப்போது, காஞ்சிபுரத்தில் தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்ததாகவும், அதனை விரைந்து பிடித்து பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என பொதுமக்களின் குறகைளை பதிவு செய்தார். இது குறித்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் மறைமலைநகர் நகராட்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட  நாய் பிடிக்கும் வாகனங்கள் மூலம் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 31 நாய்களை பிடித்து வாகனத்தில் ஏற்றி திருக்காலிமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி இடத்தில் வைத்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் மூலம் கருத்தடை ஊசி செலுத்தி அதன் பின் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு வாரத்திற்கு இந்த தெரு நாய்கள் பிடிக்கும் பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanjipuram , Dogs roaming on road caught in Kancheepuram: Corporation staff action
× RELATED காஞ்சி இலக்கிய வட்ட கூட்டம்