×

மாமல்லபுரத்தில் சிற்ப கலைக்கல்லூரியை எம்எல்ஏக்கள் குழு ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைக்கல்லூரியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் எம்எல்ஏக்கள் நேற்று ஆய்வு செய்தார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயிலில் ரூ.60 லட்சம் மதிப்பில் 45 அடி உயரத்தில் அழகிய ‘சிற்பக்கலைத்தூண்’ கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம் ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு மாமல்லபுரம் வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  தனியார் நட்சத்திர ரிசார்ட்டில் நடந்த சர்வதேச 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெறும் சதுரங்கவீரர், வீராங்கனைகளை, பயிற்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், பார்வையாளர்களை கவரும் வகையில் 45 அடி சிற்பக்கலைத்தூணை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 27ம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தலைமையில், எம்எல்ஏக்கள் வேல்முருகன், சிந்தனைசெல்வன், ராஜா, அருண்குமார், மரகதம் குமரவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாமல்லபுரத்தில் முதல்வர் திறந்து வைத்த 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, அக்குழுவினர் சிற்ப கலைக்கல்லூரி மாணவர்கள் கை வண்ணத்தில் செய்த சிலைகளை பார்வையிட்டனர். அந்த சிலைகள் எந்தெந்த பொருட்கள் மூலம் செய்யப்பட்டது என விவரங்களைக் கேட்டனர். இதுகுறித்து, தமிழ்நாடு சட்டமன்ற  பொது கணக்கு குழுவினர் கூறுகையில், மாமல்லபுரம் சிற்ப கலைக்கல்லூரியில் பெண்கள் தங்கி படிக்கும் வகையில் 27 ஏக்கரில் தங்கும் விடுதிகட்ட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்கிறோம்’ என்றனர். ஆய்வின்போது, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Tags : College of Sculpture ,Mamallapuram , A group of MLAs inspected the College of Sculpture at Mamallapuram
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...