அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடி அடுத்து திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டி நிகழ்ச்சியை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார். ஆவடி தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கினார். இதற்கு முன்னதாக திருநின்றவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 11ம் வகுப்பு பயின்ற சுமார் 149 மாணவர்கள் மற்றும் 139 மாணவிகள் என 286 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், திருநின்றவூர் நகர கழகச் செயலாளர் தி.வை.ரவி, தலைவர் உஷாராணி ரவி, துணை தலைவர் சரளா நாகராஜ், தலைமை ஆசிரியர் லஷ்மிபிரபா, நகரகழக நிர்வாகிகள் எஸ்.கமலக்கண்ணன், தெ.நாகராஜ், ஆர்.ரவி, ச.பாபு, எஸ்.குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணியை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோன்று, மாதவரம் தொகுதிக்குட்ப்பட்ட பாண்டேஸ்வரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா ைசக்கிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியப்பின் 11ம் வகுப்பு பயின்ற  80 மாணாக்கர்களுக்கு சைக்கிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் தயாளன், மாவட்ட கவுன்சிலர் சதீஷ்குமார், பாண்டேஷ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ராமன், மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: