ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் புதிய அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி அம்பேத்கர் நகரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். இவர்கள் படிக்கும் அங்கன்வாடிமைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து, மேற்கூரைகள் சேதமடைந்தும், கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதில் செடி கொடிகள் மற்றும் மரங்கள் படர்ந்துள்ளது.  இதை சுற்றியும் புதர்கள் மண்டிக்கிடக்கிறது.  

இந்நிலையில் அங்கன்வாடிமையம் தற்போது அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் இயங்கி  வருகிறது. மேலும் பழைய கட்டிடத்தின் அருகிலேயே அரசு நடுநிலைப்பள்ளியும் உள்ளது. இந்த பழுதடைந்த  அங்கன்வாடி மையத்தில் இருந்து பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடுநிலைப்பள்ளிகளுக்குள் செல்கிறது. எனவே பயன்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது; ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் உள்ள அங்கன்வாடி மையக்கட்டிடம் பழுதடைந்து பயன்படாமல் உள்ளது. இதனால் அருகில் உள்ள மகளிர்குழு கட்டிடத்தில் கடந்த 5 வருடமாக மாணவர்கள் படித்து வருகிறார்கள். எனவே பழுடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தரவேண்டும் என கூறினர்.

*அங்கன்வாடிமையம் தற்போது அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் இயங்கி வருகிறது

Related Stories: