×

உக்ரைன் போரை நிறுத்தும் சமாதான குழுவில் மோடி: மெக்சிகோ பரிந்துரை

பிட்ஸ்பர்க்: உக்ரைன், ரஷ்யா இடையேயான போரை நிறுத்த மோடி, போப் பிரான்சிஸ், கட்டரெஸ் அடங்கிய சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிக்க மெக்சிகோ பரிந்துரை செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 7 மாதங்களை கடந்துள்ளது. நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐநா பொதுச்சபையின் 77வது அமர்வின் பொது விவாதத்தில் காணொலி மூலம் பங்கேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ராணுவ வீரர்களை அணி திரட்டும் புடினின் நடவடிக்கை, அவர் போரை நிறுத்தும் சமாதான பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்பதை காட்டுவதாக கூறினார்.

இந்நிலையில், மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ லூயிஸ், `உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்த, இந்திய பிரதமர் மோடி, போப்பாண்டவர் பிரான்சிஸ், ஐநா பொதுச் செயலாளர் கட்டரெஸ் அடங்கிய சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிக்க வேண்டும்,’ என்று பரிந்துரை செய்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ``மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரெஸ் மானுவேல் முன்மொழிந்த திட்டத்தையே தற்போது வழிமொழிந்துள்ளேன்,’’ என்று தெரிவித்தார்.

Tags : Modi ,Mexico ,Ukraine , Modi: Mexico recommended to peace panel to end Ukraine war
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...