×

பீகார், கர்நாடகாவில் போலி பிபி மாத்திரை: ஒடிசா சோதனையில் அதிர்ச்சி

புவனேஸ்வர்: பீகாரில் இருந்து கொண்டு வரப்பட்ட போலி ரத்த அழுத்த மாத்திரைகளை ஒடிசா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிசாவின், புவனேஸ்வர், கட்டாக் நகரங்களில் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டெல்மா 40, டெல்மா ஏஎம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பரிசோதனை கூடங்களில் சோதித்து பார்த்தபோது, அவை போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்துகளை மொத்த விற்பனை செய்த விநியோகஸ்தர்களிடம் விசாரித்த போது, பீகாரில் உள்ள கயா மற்றும் கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து இந்த மாத்திரைகளை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து, விநியோகஸ்தர்களின் வங்கி பணம் ரூ.12 லட்சத்தை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் 2 முறை பீகார் சென்றனர். ஆனால், அம்மாநில அதிகாரிகள் ஒடிசா அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஒடிசா மருத்துவ துறை செயலாளர் என்.பி.டால், பீகார் மருத்துவ துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், போலி மருந்துகளை உற்பத்தி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

Tags : BP ,Bihar, Karnataka ,Odisha , Fake BP Pills in Bihar, Karnataka: Shock in Odisha Test
× RELATED இந்தியாவில் அதிக வெப்ப அலை வீசிய...