குப்பையில் கோட்டை விட்ட பஞ்சாப் அரசு: ரூ.2,180 கோடி அபராதம்

புதுடெல்லி: குப்பைகள், கழிவு நீர்  மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள்- 2016ன்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேடுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்பில் ஏற்பட்டுள்ள சுற்றுசூழல் பாதிப்பு குறித்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட மற்றும் திரவக்கழிவுகளை அப்புறப்படுத்த தவறியதற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், ரூ.100 கோடியை ஏற்கனவே மாநில அரசு செலுத்தியுள்ளது. மீதி அபராதத் தொகையான ரூ.2080 கோடியை 2 மாதத்திற்குள் செலுத்த வேண்டும்,’ என்று நீதிபதி கோயல் உத்தரவிட்டார்.

Related Stories: