பிஎட் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் ஆன்லைன் மூலமாக தொடங்குகிறது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பி.எட் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று (24ம் தேதி) முதல் அக்டோபர் 3ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதனை தொடர்ந்து, அக்டோபர் 6ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெறும். மாணவர்கள், www.tngasaedu.in, இணையதள முகவரிகளில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். பி.எட். படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது வரிசைப்படி தாங்கள் விரும்பிய கல்லூரியை தேர்வு செய்தல் வேண்டும். இதுகுறித்த விவரங்களை மாணவர்கள் www.tngasaedu.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: