பாகுபலி, ஆர்ஆர்ஆர் வெற்றி எதிரொலி: ராஜமவுலியுடன் ஹாலிவுட் நிறுவனம் ஒப்பந்தம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டின் சிஏஏ நிறுவனம் இயக்குனர் ராஜமவுலியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் மூலம் சர்வதேச கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார், ராஜமவுலி. அவரது பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்கள் இரண்டுமே தலா ரூ.1000 கோடி வசூலை ஈட்டியது. இதனால் ராஜமவுலியின் மீது ஹாலிவுட்டின் பார்வையும் பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களை சந்தைப்படுத்துதல், விளம்பர உரிமம் வழங்குதல், திறமையான கலைஞர்களை கவுரவித்தல் ஆகிய பணிகளில் கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட் ஏஜென்சி (சிஏஏ) ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம் முதல்முறையாக இந்தியாவை கவுரவிக்கும் விதமாக ராஜமவுலியுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி இனி, ராஜமவுலியின் படங்களை ஹாலிவுட்டிலும், பிற நாடுகளிலும் எளிதில் சந்தைப்படுத்த  முடியும். இப்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. அப்படத்துடன் சிஏஏ, ராஜமவுலிக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

Related Stories: