×

32 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர்கள் திறப்பு: பொன்னியின் செல்வன் வெளியாகிறது

ஜம்மு: 32 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. பொன்னியின் செல்வன் படம் இங்கு திரையிடப்பட உள்ளது. காஷ்மீரில் 1990ல் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இடையில் 1999ல் ஒரு தியேட்டர் திறக்கப்பட்டதும், அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் தியேட்டரே திறக்கப்படவில்லை. இதனால், கடந்த 32 ஆண்டுகளாக காஷ்மீரில் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் ஒரு வணிக வளாகத்தில் திறக்கப்பட்ட தியேட்டரில் ஒத்திகைக்காக திரைப்படம் திரையிடப்பட்டது.

இதற்கு காஷ்மீர் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தீவிரவாதம் குறைந்து, காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஐநாக்ஸ் தியேட்டர்கள் காஷ்மீரில் திறக்கப்பட உள்ளன. இந்த தியேட்டரை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைக்கிறார். வரும் 30ம் தேதி விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் மற்றும் ஹிரித்திக் ரோஷன், சைஃப் அலிகான் நடித்துள்ள விக்ரம் வேதா இந்திப் படம் ரிலீசாகிறது.

காஷ்மீரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும், புதிய படங்களாக இந்த 2 படங்களும் அங்கு திரையிடப்பட உள்ளன. இதனால், காஷ்மீரிலுள்ள சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kashmir ,Ponni , Theaters open in Kashmir after 32 years: Ponni's Selvan releases
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...