உயர்கல்விக்கு செல்லாத மாணவ, மாணவிகள் எத்தனை பேர்?.. அதிகாரிகள் விளக்கம் அளிக்க பள்ளி கல்வி துறை உத்தரவு

சென்னை: தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குநர்  வெளியிட்டுள்ள அறிக்கை: 2021-2022ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் இந்த ஆண்டு 2022-2023ல் உயர்கல்வியை  தொடர்ந்துள்ளார்களா என்பதை அறியவும், அவ்வாறு உயர்கல்வி தொடராத மாணவர்கள் இருந்தால் அதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை நீக்கி அவர்கள் உயர்கல்விக்கு செல்ல தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும், ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.  

அதன்படி,  79 ஆயிரத்து 762 மாணவர்களின் விவரங்களில் 8  ஆயிரத்து 588 பேர் எந்தவித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை.  இதற்காக மாணவர்களின் முழு விவரங்கள் தொலைபேசி எண் உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளில் இருந்து பெற்று  வழங்க வேண்டும்.  எனவே, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இந்த பணியை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு மாணவர்களின் விவரங்களை பெற்று உரிய படிவத்தில் மாநில திட்ட இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.

Related Stories: