×

நிச்சயதார்த்த விழாவில் மணப்பெண்ணின் நகை திருடிய சென்னை தோழி சிக்கினார்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப்(53). இவரது மகளுக்கு கடந்த 18ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் இவரது வீட்டில் நடைபெற்றது. இதில் மணப்பெண்ணின் தோழிகள் உட்பட உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து மாலை பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த மணப்பெண்ணின் முத்துமாலை, செயின், ஆரம், வளையல், மோதிரம் உள்ளிட்ட 38 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதுபற்றி முகமது ஆரிப் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து மணப்பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டி மணலியை சேர்ந்த பாலு மகள் வினிதாவை(25) ேநற்று  பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இவர் எம்சிஏ பட்டதாரி. இன்னும் திருமண ஆகவில்லை. வினிதாவும் திருமண நிச்சயம் செய்யப்பட்ட மணப்பெண்ணும் மன்னார்குடி தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். பின்னர் வினிதா படிப்பு முடிந்து சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

தோழிக்கு திருமண நிச்சயதார்த்த அழைப்பு வந்ததும் கடந்த 18ம் தேதி சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த வினிதா வீட்டில் உள்ள மாடியில் மணப்பெண்ணின் அறையில் தங்கியுள்ளார். அப்போது மணப்பெண் நகைகளை கழற்றி வைத்ததை பார்த்துள்ளார். பின்னர் தோழி மற்றும் உறவினர்களின் கவனத்தை திசை திருப்பி அப்போதே நகைகளை திருடி வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத போல் ஊருக்கு செல்வதாக கூறி சென்னைக்கு புறப்பட்டார்.

பின்னர் அங்குள்ள நகை கடையில் பாதி நகையை விற்றுவிட்டு வேறு நகை வாங்கியுள்ளார். பின்னர் மன்னார்குடிக்கும் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்கும் வந்து மற்ற நகைகளை விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  தொடர்ந்து வினிதாவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Engagement ceremony, bride's jewelery theft, Chennai friend caught
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...