×

அதிமுக மாஜி அமைச்சர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க கூறிய ஓ.பி.எஸ். வீட்டில் தான் முதலில் சோதனை நடத்தவேண்டும்: ஆர்.பி. உதயகுமார் பதிலடி

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கட்டும் என்று சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தான் முதலில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமையேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கருத்து சொன்ன ஓ.பன்னீர்செல்வம், அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கட்டும் என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்து அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்டவர் என்று கூறிய ஆர்.பி. உதயகுமார், எனவே சோதனை நடந்தால் முதலில் பன்னீர்செல்வம் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்தார். மேலும் தொண்டர்களின் போர்வையில் குண்டர்களை கூட்டிக்கொண்டு அதிமுக அலுவலகத்தை துவம்சம் செய்த பன்னீர்செல்வம், எத்தனை காசிக்கு சென்றாலும் பாவம் தீராது என்று தெரிவித்தார். தொண்டர்கள் யார் பக்கம் என்று பன்னீர்செல்வத்துக்கு தெரியும் என்றும் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.


Tags : AIADMK ,OPS ,RB ,Udayakumar , AIADMK Ex-Ministers, OPS, Sothanai, R.P. Udayakumar
× RELATED அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக மூத்த...