×

திருமழிசை பேரூராட்சியில் உணவு விடுதியில் 35 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருமழிசை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட மடவிளாகம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் நேற்று பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் சா.கண்ணன் மேற்பார்வையில், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் தா.மாலா மற்றும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

  இந்த ஆய்வில், அந்த உணவு விடுதியில் தமிழக அரசினால் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்த்தல், ஒழிப்பு பணிகள் குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  

மேலும், கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்தார். இதில் இளநிலை உதவியாளர் ஜோசப், பணி ஆய்வாளர் மதியழகன், உதவி பொறியாளர் சுபாஷினி, பொது சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kariksha Rurashi , 35 kg plastic bag confiscated in Tirumashisai Municipality, food court
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...