திருப்பதியில் இப்படியும் சம்பவம் டிக் டாக்கில் அறிமுகமான காதலியை கணவருக்கு திருமணம் செய்த மனைவி-ஒரே குடும்பமாக வசிக்கும் ருசிகரம்

திருமலை : ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், டக்கிலி மண்டலத்தில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். 2 ஆண்டுகளுக்கு முன்பு டிக்டாக் வீடியோ மூலம் பழக்கமான விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதேபோல், கல்யாண் பல  இளம்பெண்களிடம் டிக்டாக் மூலம் அறிமுகமாகி சந்தித்தார். அந்த அறிமுகத்தில் நித்யஸ்ரீ- கல்யாண் இருவரும் பேசி வந்தது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இந்நிலையில், கல்யாண் டிக்டாக் வீடியோ செய்வதில் இருந்து விலகினார். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கு காரணம் கல்யாண் பெற்றோர் டிக்டாக் மூலம் அறிமுகமான கல்யாண் காதலித்து வந்த  கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலாவுடன் திருமணம் செய்து வைத்தனர். தற்போது, கல்யாண்- விமலாவும் இணைந்து டிக் டாக் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோக்களை பார்த்த முதல் காதலி நித்யஸ்ரீ  அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஆனாலும், கல்யாணை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இதனால், தனது காதலன் இருக்கும் விசாகப்பட்டினத்தில் இருந்து டக்கிலிக்கு வந்தார். நேரடியாக கல்யாணை சந்திக்காமல் விமலாவை சந்தித்து தனது காதலை தெரிவித்தார்.

தன்னால் கல்யாணை மறக்க முடியவில்லை. எனவே, கல்யாணை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். நான் திருமணம் செய்து கொண்டாலும் 3 பேரும் ஒன்றாக வாழ்வோம் என கூறினார்.  நித்யஸ்ரீ கூறியதை கேட்டு  மனமுடைந்த விமலா, நித்யஸ்ரீ நிலமையை யோசித்து தனது கணவருக்கு நித்யஸ்ரீயை   திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். பின்னர் விமலாவும், நித்யஸ்ரீயும் இணைந்து கல்யாணிடம் சென்றனர். இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த கல்யாண் அதிர்ச்சியடைந்தார்.

அவர்கள் கூறியதை கேட்டு முதலில் ஏற்க மறுத்தார். பின்னர் மனைவியும், காதலியும்  சமரசம் செய்ததால்  திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதையடுத்து, டிக்டாக் மூலம் அறிமுகமான தனது முதல் காதலியை தனது மனைவிக்கு முன்னால் தாலி கட்டி வீட்டிற்கு அழைத்துச்சென்றார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories: