பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

பந்தலூர் : பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம், பிதர்காடு வனச்சரகம், பிதர்காடு பஞ்சோராமுத்துமாரியம்மன் கோயில் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் நேற்று காலை ஆண் யானை ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு பிதர்காடு வனத்துறையினர் சென்று பார்வையிட்டனர். விசாரணையில் மின்சாரம் தாக்கி இறந்த ஆண் யானைக்கு 20 வயது இருக்கும் என்பது தெரிய வந்தது. யானை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தபோது தனியார் தேயிலைத் தோட்டத்தில் இருந்த பாக்கு மரத்தை உடைத்து சாப்பிட முயற்சித்துள்ளது. பாக்குமரம் உடைந்து உயர் மின்னழுத்த மின் கம்பியில் விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்றபோது மின்கம்பி யானையின் தும்பிக்கையில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் முதுமலையில் இருந்து வன உயிரின கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் இறந்த யானைக்கு உடல் கூறு பரிசோதனை ேமற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து யானையின் உடல் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு புதைக்கப்பட்டது.

Related Stories: