×

மாஞ்சோலையில் பட்டப்பகலில் மிளா நடமாட்டம்

அம்பை :  மாஞ்சோலையில் பட்டபகலில் மிளாவின் நடமாட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.  நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை அமைத்துள்ளது. இங்குள்ள நாலுமுக்கு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சமீபகாலமாக மிளாக்கள் சுற்றி திரிந்து வருகிறது.
பொதுவாக இரவு நேரங்களில் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மிளா எந்த வித அச்சமும்  இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. மேலும் மாஞ்சோலை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எடுக்கும் புகைப்படத்திற்கு மிளாக்கள் போஸ் கொடுத்து வருகிறது. இருப்பினும் இப்பகுதியில் வாழும் தொழிலாளர்களுக்கு மிளாவின் நடமாட்டம்   அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது என்று தெரிவித்தனர்.



Tags : Millet ,Mancholai , Ambai: Tea plantation workers in Mancholai are in fear due to the movement of mila during the day. Nellai District
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...