×

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சியில் தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

குமரி: நவராத்திரி விழாவினை முன்னிட்டு, பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சியில் தமிழக, கேரள அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றனர். நவராத்திரி திருவிழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கேரள மாநில தேவசம் போர்டுதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கேரள மாநில பள்ளிகல்விதுறை அமைச்சர் சிவன்குட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

கேரளமாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயில் வளாகத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க திருவிதாங்கூர் மன்னர் காலத்திலிருந்தே மன்னரின் உடைவாளை முன்னேஏந்திச்செல்ல, சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி மற்றும் தேவாரக்கட்டு அருள்மிகு சரஸ்வதிஅம்மன் விக்ரகங்கள் பவனியாக எடுத்துச்செல்லப்படுவது வழக்கமாகும். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி விக்ரகங்கள் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டு தேவாரக்கட்டு அருள்மிகு சரஸ்வதி அம்மன் திருக்கோயிலை சென்றடைந்தன.

அதனைத் தொடர்ந்து இன்று பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த மார்த்ததாண்டவர்மாவின் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கேரள மாநிலதேவசம்போர்டுதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கேரளமாநில பள்ளிகல்விதுறை அமைச்சர் சிவன்குட்டி ஆகியோர் மன்னரின் உடைவாளை எடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களிடம் வழங்கினர். அதனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தேவாரக்கெட்டு அருள்மிகு சரஸ்வதிஅம்மன் பவனிக்கு முன்னால் எடுத்துச் செல்லும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலரிடம் வழங்கினார்.

இந்த விழா இருமாநிலமக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விழாவாக காலம்காலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்cf இரா.கண்ணன்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த்,இ.ஆ.ப., தமிழ்நாடு, கேரளமாநில மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  


Tags : Navratri festival ,Ministers ,Tamil ,Nadu ,Kerala ,Padmanabhapuram Palace Upper Palace , Navratri Festival, Padmanabhapuram, Swag of Clothes, Tamil Nadu-Kerala Minister
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...