×

ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகும் தங்கம் விலை..சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.37,520க்கு விற்பனை..அதிர்ச்சியில் மக்கள்..!!

சென்னை: தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் சற்று அதிரடி ஏற்றத்தை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,690க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.63.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தங்கம் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. அதிலும் பெண்களுக்கு என்றால் சொல்ல வார்த்தைகளே இல்லை. குறிப்பாக மற்ற மாநிலங்களை விட தென்இந்தியாவில் உள்ள பெண்கள் மட்டுமே தங்கத்தின் மீது பெண்கள் அதீத மோகம் கொண்டுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. அதிலும் இம்மாதம் தங்கத்தின் விலை தொடர் சரிவை மட்டுமே கண்டு விற்கப்படுவதால், மேலும் இம்மாதம் தீபாவளி மாதம் என்பதாலும் பெண்கள் கூட்டம் மொத்தமும் நகைக்கடைகளில் அலைமோதுகிறது.

இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது. அதாவது, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736-க்கும் விற்பனையானது. அதன் பின் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே விற்பனையானது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக கடந்த வாரம் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் குறைவை கண்டு விற்பனை செய்யப்பட்டது.

அதாவது சவரன் ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கும், கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,740-க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி இவ்வாரத்தின் முதல் 2 தினங்களில் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே  விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ரூ.80 குறைந்து ரூ.36,960-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,620-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் மக்களை சற்று அதிர்ச்சிகுள்ளாக்கும் வகையில் தங்கத்தின் விலை ஏறியுள்ளது.

அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,520-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,690-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.63.20-க்கும், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.63,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு வந்த நிலையில், இன்று தங்க விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Sawaran , Chennai, Aparana Gold, Sawaran, High
× RELATED வீடு புகுந்து மூதாட்டி காதை அறுத்து 8...