×

வல்லநாடு வெளிமான் சரணாலயம் செல்ல சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை முடிவு: வன அலுவலர் அபிஷேக் தோமர்

தூத்துக்குடி: வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மான்களை கண்டு ரசிக்க சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை முடிவு செய்துள்ளது. நுழைவு பகுதியில் இருந்து மலையின் இருபுறமும் சுமார் 4 கி.மீ வரை மக்கள் சென்று மான்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. செப் அல்லது அக்டோபர் மாதத்தில் பொதுமக்கள் மான்களை கண்டு ரசிக்க வசதியாக சூழல் சுற்றலா தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சரணாலயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.


Tags : Forest Department ,Vallanadu Foreman Sanctuary ,Forest Officer ,Abishek Tomar , Forest department decided to start eco-tourism to visit Vallanadu deer sanctuary: Forest officer Abhishek Tomar
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...