×

மாதவரம், திருவொற்றியூர் அரசு பள்ளிகளில் 1,537 மாணவர்களுக்கு சைக்கிள்: எம்எல்ஏக்கள் வழங்கினர்

திருவொற்றியூர்: மாதவரம், திருவொற்றியூர் அரசு பள்ளிகளில் பயிலும் 1,537 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் ஆகியோர்  வழங்கினர். மாதவரம் செயின்ட் ஆனீஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, கவுன்சிலர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாதாவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று, 337 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

அதேபோல், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, மணலி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வெள்ளையன் செட்டியார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் 1,200 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் வழங்கினார். நிகழ்ச்சிகளில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.எஸ்.நாகலிங்கம், வி.ராமநாதன், கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், திமுக நிர்வாகிகள் வாசு கருணாநிதி, சைலஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Madhavaram ,Tiruvottiyur government , 1,537 students in Madhavaram and Tiruvottiyur government schools were given bicycles: MLAs
× RELATED காக்கி சீருடை அணிந்து வாகன சோதனை;...