துருவ் விக்ரமின் இசை ஆல்பம் மனசே வெளியானது

சென்னை: துருவ் விக்ரமின் மனசே இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. ஆதித்ய வர்மா படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். இப்போது மாரி செல்வராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் கபடி வீரனாக நடிக்கிறார். கபடியை சுற்றி நடக்கும் கதையாக இந்த படம் உருவாக உள்ளது. நடிப்பில் மட்டுமின்றி, இசையிலும் ஆர்வம் கொண்டவர் துருவ். பாடல்களையும் பாடுவார்.

இந்நிலையில் மனசே என்ற இசை ஆல்பத்தை அவர் உருவாக்கியுள்ளார். இதற்காக யுடியூப்பில் இணைந்துள்ளார். மேலும் இணையதளத்தில் இந்த இசை ஆல்பத்தை அவர் நேற்று வெளியிட்டார். இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த இசை ஆல்பத்தில் துருவ் நடித்தும் இருக்கிறார். இதன் போஸ்டரை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Related Stories: