×

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் நேற்று முதல் பங்கேற்றார். பூந்தமல்லி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கிறது. இதில் பங்கேற்க கமல்ஹாசன் நேற்று காலை வந்தார். அவரை இயக்குனர் ஷங்கர் வரவேற்றார். பின்னர் கமல் நடிக்க வேண்டிய காட்சியை பற்றி ஷங்கர் விளக்கினார். இதையடுத்து அந்த காட்சியில் கமல்ஹாசன் நடித்தார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், படத்தின் பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும் லைக்காவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க ஷங்கர் சென்றுவிட்டார். இந்நிலையில் கமல் நடித்த விக்ரம் படத்தை வெளியிட்ட, உதயநிதி ஸ்டாலின், இந்தியன் 2 மீண்டும் தொடங்கும் என அறிவித்தார். இதையடுத்து இந்தியன் 2 படத்தை லைக்காவுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். இப்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags : Kamal , Kamal on the sets of Indian 2
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...