×

17 லட்சம் பேர் இன படுகொலை 16 ஆண்டு வழக்கிற்கு ரூ.2,720 கோடி செலவு: கம்போடியாவில் விசாரணை முடிப்பு

நம்பென்: தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை கெமர்ரூச்  கொடுங்கோலர்கள் போல்-பாட், இயங்சரே, நுவான்சியா, கியூ சம்பான் ஆகியோர் கடந்த 1975-79ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். அப்போது, 17 லட்சம் அப்பாவி பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஐநா.வின் முயற்சியால் இவர்கள் 4 பேர் மீதும் கம்போடியா சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல், போர்க்குற்ற விசாரணை நடந்து வந்தது. இதில், போல்-பாட் (87) 1998ல் இறந்தார்.

இயங்சரே (87) 2013ம் ஆண்டில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். வெளியுறவு அமைச்சராக இருந்த நுவான்சியா (93) 2019ல் இறந்தார். இவர்களில் உயிருடன் இருக்கும் கியூ சம்பான் (91)என்பவருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதிபடுத்தியது. கொடுங்கோல் தலைவர்களில் போல்-பாட் தவிர, மீதமுள்ள 3 பேரின் வழக்கை விசாரித்து தண்டனை வழங்க 16 ஆண்டுகளில் ரூ.2,720 கோடி செலவிடப்பட்டு உள்ளது.


Tags : Cambodia , 17 Lakh Genocide 16-Year Case Costs Rs 2,720 Crore: Investigation Completed in Cambodia
× RELATED ஆயிரம் லிங்கங்களின் ஆறு