×

ஒலிம்பிக் கமிட்டி சட்ட திருத்தம் நீதிபதி நாகேஸ்வர ராவை நியமித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள முன்னாள் நீதிபதி நாகேஸ்வர ராவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகத்தை கலைக்கும்படியும், வரும் டிசம்பருக்குள் அதற்கு தேர்தல் நடத்தும்படியும் கடந்த 8ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கேட்டு கொண்டது. இல்லையென்றால், இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தவும், அதன் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வரும் 27ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் நடக்க இருக்கும் கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் பொது செயலாளர் ராஜிவ் மேத்தா, துணை தலைவர் அடீல் சுமரிவலா ஆகியோர் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை கூடுதல் செயலரின் உத்தரவுப்படி நீதிபதி நாகேஸ்வர ராவுக்காக செலவிடப்படும் தொகையை இந்திய ஒலிம்பிக் கமிட்டி திரும்ப செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Judge ,Nageswara Rao , The Supreme Court appointed Judge Nageswara Rao as the Olympic Committee Amendment Act judge
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...