அதிமுக ஆட்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த ஓபிஎஸ் வீட்டில்தான் சோதனை நடத்த வேண்டும்: மாஜி அமைச்சர் உதயக்குமார் பாய்ச்சல்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் உதயக்குமார் அளித்த பேட்டி: அதிமுக தொண்டர்கள் என்ற போர்வையில் குண்டர்களை கூட்டிக் கொண்டு அதிமுக அலுவலகத்தை துவம்சம் செய்த ஓ.பன்னீர்செல்வம் எத்தனை முறை காசிக்கு சென்றாலும் பாவம் தீராது. அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்று அவருக்கு தெரியும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் சோதனை பற்றிய கேள்விக்கு அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கட்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளார். ஆனால் அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டத்திற்கும் நிதியமைச்சராக இருந்து ஒப்புதல் அளித்து கையொப்பமிட்ட உங்கள் வீட்டில்தான் சோதனை நடத்த வேண்டும் என்றார்.

Related Stories: