ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் காலத்தை கண்டறிய சோதனை: முஸ்லிம் அமைப்புகளுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், ஞானவாபியில் உள்ள மசூதியின் பின்புறம் சிங்கார கவுரி அம்மன் சிலைகள் உள்ளன. இவற்றை மக்கள் தரிசித்து வருகின்றனர். இந்த நிலத்துக்கு உரிமை கோரி சில இந்து அமைப்புகள் தொடர்ந்துள்ள வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே இது குறித்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதிக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு உகந்தவைதான் என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், ஞானவாபி மசூதி தொடர்பான பிரதான வழக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மசூதிக்குள் இருக்கும் சிவலிங்கத்தின் காலத்தை கண்டறிய, ‘கார்பன் டேட்டிங்’ சோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும்,’ என இந்து அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்கும்படி இஸ்லாமிய அமைப்புகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: