×

மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மசூதி, மதரசாவுக்கு நேற்று திடீரென சென்றார். மதரசாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி கஸ்துாரிபாய் காந்தி மார்க்கில் உள்ள மசூதி மற்றும் ஆசாத்பூரில் உள்ள ஒரு மதரசாவுக்கு நேற்று சென்றார். மதரசா மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பகவத் உள்ளே சென்றதும் மாணவர்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என கோஷமிட்டு வரவேற்றனர். மோகன் பகவத் மதரசா செல்வது இதுவே முதல் தடவை என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் தெரிவித்தார்.

மாணவர்களிடையே பேசிய பகவத், ‘ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகள் வேறு விதமானதாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்,’ என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்பி அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் உயர் குடிமக்கள் சிலரை அவர் சந்தித்துள்ளார். அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது,’ என்றார்.
தேசத் தந்தை பகவத்: இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது பேசுகையில், ‘மோகன் பகவத் இந்த நாட்டின் தேச தந்தை’ என்று புகழ்ந்தார். ஆனால். உடனே குறுக்கிட்ட மோகன் பகவத், ‘நாட்டுக்கு ஒருவர்தான் தேச தந்தை. நாம் அனைவரும் தேசத்தின் குழந்தைகள்,’ என்றார்.

Tags : Mohan Bhagwat ,Imams , Mohan Bhagwat meets Imams at mosque: Students chant Vande Mataram
× RELATED பிரதமர் மோடிக்கு ராமர் கோயில்...