ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி துரைசாமி நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி எம்.துரைசாமி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இவர் கடந்த 21ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, நீதிபதி துரைசாமியை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. நீதிபதி துரைசாமி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது, அதிமுக பொதுக்குழு செல்லும் என முக்கிய தீர்ப்பளித்துள்ளார்.

Related Stories: