ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: ஒரே ஆண்டில் பணவீக்கம் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய நிதி அமைச்சர் பெட்ரோல் விலை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனால் பணம் வீக்கம் தவிர்க்கப்படும் என்றார். அதற்கு முன்பாக நாங்கள் விலையை குறைத்து விட்டோம் என்று தெரிவித்தார். இந்த ஆண்டு 2022-23 க்கு 83,955 கோடிக்கு மேல் கடன் எடுக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு 3 முறைகளை கடைபிடிக்கும். சாமானிய மக்களின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்பதற்காக பொது விநியோக திட்டத்திற்கு கடந்த ஆண்டு 13,000 கோடி செலவு செய்யப்பட்டது.

கடன் விகிதத்தை குறைத்துள்ளோம். பணவீக்கம் பாதிப்பு வராத அளவிற்கு, இல்லை என்றால் சட்டியை வைத்துக் கொண்டு டெல்லியில் நிற்க வேண்டும். எங்களுக்கு சுயமரியாதை உள்ளது. அதற்கு ஏற்றார்போல் நாங்கள் பாதிப்பு வாராத அளவிற்கு செயல்படுகிறோம் என்று அவர் கூறினார். ஒரே ஆண்டில் பணவீக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். கடன், வட்டியை குறைத்துள்ளோம். பணவீக்கம் உள்ளிட்டவற்றையும் குறைத்துள்ளோம். இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது பாதிப்பை குறைத்துள்ளோம். பண வீக்கத்தில் மற்ற மாநிலங்களையும் தமிழகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பாதிப்பு என்பது தமிழகத்தில் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அவர் பேட்டியில் தெரிவித்துக்கொண்டார்.

Related Stories: