×

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில் எவ்விதமான குற்ற நோக்கமும் இல்லை; அவர் மீதான 14 வழக்குகள் ரத்து: சிபிஐ அறிவிப்பு

டெல்லி: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில் எவ்விதமான குற்ற நோக்கமும் இல்லை என அவர் மீதான 14 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஐ அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தொழிலதிபர்களின் சார்பாக ஒன்றிய அமைச்சக அதிகாரிகள் பலரிடம் நீரா ராடியா தொலைபேசியில் உரையாடியதாக சர்ச்சை புயல் கிளம்பியது.

அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பெரும் புள்ளிகளோடு நீரா ராடியா பேசியதாக வெளியான ஆடியோ இந்திய அரசியலையே உலுக்கியது. இந்த உரையாடல்கள் தொடர்பாக வருமானவரித்துறை 14 வழக்குகள் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியது.

நீரா ராடியாவின் 8,000 தொலைபேசி உரையாடல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இதில் நீரா ராடியா, தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய ஆடியோ டேப்பும் அடங்கும். இந்த ஆடியோ 2010-ம் ஆண்டு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

ஆடியோ டேப் கசிய விடப்பட்டது தன்னுடைய தனிமனித உரிமையை மீறும் செயல் என ரத்தன் டாடா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

8,000 தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்து முடித்த நிலையில் முதற்கட்ட விசாரணையை கைவிடுவதாக சிபிஐ அறிவித்துள்ளது. நீரா ராடியாவின் உரையாடலில் எந்த விதமான குற்ற நோக்கமும் இல்லை என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசியலை உலுக்கிய சர்ச்சை 12 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

Tags : Neera Radia ,CBI , Neera Radia's phone conversation had no criminal intent; 14 cases against him quashed: CBI notice
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...