சிதம்பரத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த நடராஜர் கோவில் தீட்சிதர் கைது: போலீசார் அதிரடி

கடலூர்: சிதம்பரத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த நடராஜர் கோவில் தீட்சிதரையும், திருமணம் செய்துவைத்த தீட்சிதரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த நடராஜர் கோவில் தீட்சிதரான சோமசேகர், தனது 14 வயது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர், சித்ரா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடராஜர் கோவில் தீட்சிதருடன் சிறுமிக்கு திருமணமானது உறுதியானது.

இதுகுறித்து சமூகநலத்துறையின் மகளிர் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த அவரது தந்தை சோமசேகர், திருமணம் செய்துகொண்ட தீட்சிதர் பசுபதி மற்றும் அவரது தந்தை கணபதி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: