பூண்டி ஊராட்சியில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ இயக்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சியில் உள்ள ஜெயராமன் தெருவில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டிலும் பூண்டி பேருந்து நிலையம் அருகில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது. இந்த விழாவுக்கு மின்சாரவாரிய செயற்பொறியாளர் கனகராஜ் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் கே.யுவராஜ், இளநிலை பொறியாளர் குமரவேல், ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஊராட்சி தலைவர் சித்ரா ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

திமுக ஒன்றிய  செயலாளர் கிறிஸ்டி, மாவட்ட நிர்வாகிகள் ஐ.ஏ.மகிமைதாஸ், ப.சிட்டிபாபு, கே.யு.சிவசங்கரி, தா.மோதிலால், ஒன்றிய நிர்வாகிகள், பட்டரை கே.பாஸ்கர், இ.லட்சுமணன், அ.ஆனந்த், பி.தேவேந்திரன், ஜி.டில்லிபாபு, சௌக்கர் பாண்டியன், தா.நடராஜ், எம்.எஸ்.அருண், எம்.லிங்கேஷ்குமார், வி.எஸ்.சதீஷ் முன்னிலை வகித்தனர். இதில், வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு இரண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை இயக்கி வைத்தார். விழாவில், பொன்.பாண்டியன், பி.சரவணன், எம்.எழில், எம்.கௌதம், பி.ராஜாசிங் உள்பட கலந்து கொண்டனர்.

Related Stories: