தங்கபாண்டியனின் உடலை இரு நாட்களில் பெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவு

மதுரை: விருதுநகர் அருப்புக்கோட்டையில் விசாரணையின் போது இறந்ததாக கூறப்படும் தங்கபாண்டியனின் உடலை இரு நாட்களில் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உடலை பெற தவறினால் காவல்துறையினரே உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வதுபோல் அடக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. தங்கபாண்டியனின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: