பந்தலூர் கிளன்ராக் பகுதியில் தாயிடம் இருந்த பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்ப்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே கிளன்ராக் காப்பி காடு பகுதியில் தாய் யானையிடம் இருந்து பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீண்டும் தாயிடம் சேர்த்தனர். நீலகிரி மாவட்டம் தேவாலா வனச்சரகம் பந்தலூர் அருகே கிளன்ராக் காப்பிக்காடு வனப்பகுதியில் தாயிடம் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று காப்பி காடு பகுதியில் நிற்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, தேவாலா வனச்சரக ரேஞ்சர் சஞ்ஜீவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குட்டி யானையை பார்த்தனர். தாயிடம் இருந்து பிரிந்து உணவு இல்லாமல் கலைப்புடன் இருப்பதை அறிந்து அதற்கு தண்ணீர் கொடுத்து கொடுத்தனர்.

தொடர்ந்து, குட்டி யானையை கண்காணித்தும் வந்தனர். சம்பவ இடத்திற்கு முதுமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் வன உயிரின கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் கூடலூர் உதவி வனப்பாதுகாலர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் சென்று பல மணி நேர  போராட்டத்திற்கு பின் குட்டியானையை மீண்டும் தாய் யானையிடம் சேர்த்தனர். தாயை பார்த்த குட்டி யானை துள்ளிக்குதித்து தாய் யானையிடம் சென்றது. பின்னர், குட்டியை அழைத்து வனப்பகுதிக்குள் தாய் யானை சென்றது.

Related Stories: