×

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் ரூ.1 கோடியில் நடைமேடை பூங்காவிற்கு பூமிபூஜை : மாநகராட்சி மேயர் தலைமையில் நடந்தது

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் நடைமேடை அமைக்க மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் தலைமையில் பூமிபூஜை நேற்று நடந்தது. கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார்.
 
அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் நகரம், கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புகோட்டை, வத்திராயிருப்பு, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை ஆக்கிரமிப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் வீடு, கடைகள் கட்டி இருந்தனர். சிவகாசி வட்டார வரி செலுத்துவோர் சங்கத்தினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். கோர்ட் உத்தரவின் பேரில் சிறுகுளம் கண்மாய் கரை பகுதியிலிருந்த 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது. இங்கு குடி வீடுகள் கட்டி குடியிருந்தவர்களுக்கு ஆணையூர் சமத்துவபுரம் அருகே குடியிருப்பு வளாகம் கட்டித் தரப்பட்டது. தற்போது சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் உள்ள காலி இடம் வாகனங்கள் நிறுத்தமாக மாறிவிட்டது. சாலையோர வியாபாரிகள் சிலரும் கடை அமைத்துள்ளனர். இங்குள்ள விருதுநகர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் நடைமேடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிதியில் சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் 840 மீட்ட நீளம் 2 அடி அகலம் உள்ள நடைமேடை அமைக்கப்படவுள்ளது. கண்மாய் உள்ளே கரையை ஒட்டி 5 அடி உயரம் சுவர் எழுப்பி நடைமேடை அமைக்க முடிவு ெசய்துள்ளனர். இப்பணிக்கான பூமிபூஜை விழா நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் அடிக்கல் நாட்டினார். துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் ரமேஷ், மண்டல தலைவர் சூர்யா சந்திரன், மாமன்ற உறுப்பினர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கூறுகையில், ‘‘சிவகாசி மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள படவுள்ளது. சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சுமார் 840 மீட்டர் தூரம் நடைமேடை அமைக்கப்படவுள்ளது. நடைமேடையை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில் கண்மாய் உள்ளே தடுப்பு வேளிகள், மற்றும் நடை மேடை உள்ளே யாரும் நுழையாதபடி தடுப்பு கம்பிகள் சுற்றிலும் அமைக்கப்படும்.
 
சிவகாசி சிறுகுளம் கண்மாய் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பகுதியில் தற்ேபாது வாகனங்கள் நிறுத்த படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு இருந்து வருகிறது. சிறுகுளம் கண்மாய் பகுதியில் நடைமேடை அமைக்கப்பட்டு மாநகராட்சி மூலம் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவகாசி பகுதி மக்களுக்கு சிறுகுளம் கண்மாய் ெபாழுதுபோக்கு மையமாக இருக்கும்’’என்றார்.

Tags : Bhoomi Pooja ,Gahimedai Park ,Kanmai Bank ,Sivakasi Sirukulam ,Municipal Corporation Mayor , Bhumi Pooja for Gahimedai Park at a cost of Rs 1 crore in Kanmai Bank area of Sivakasi Sirukulam: Under the leadership of the Municipal Corporation Mayor
× RELATED நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில்...