ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முத்தம்மாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன் சம்ஹாரமூர்த்தி சிலை திருடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.34 கோடி மதிப்புள்ள  சம்ஹாரமூர்த்தி சிலையை மீட்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் திருடப்பட்ட பழங்கால சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கால சம்ஹாரமூர்த்தி சிலை திருடப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக போலி சிலையை வைக்கப்பட்டிருப்பதாக கோயில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் கடத்தப்பட்ட பழங்கால சிலை, பழங்கால கலை பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனம் சிலையை விற்பனை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள பழங்கால கலசம் சம்ஹாரமூர்த்தி சிலையை தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான சட்டபூர்வமான ஆவணங்களை அமெரிக்காவிடம் ஒன்றிய அரசு சமர்ப்பித்துள்ளது.

Related Stories: