×

மிதாலிராஜ் சாதனையை முறியடித்தார் ஸ்மிருதி மந்தனா: 76 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000 ரன்கள் எடுத்து அபாரம்..!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய மகளிர் அணி. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று நடந்த 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் 143 ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன் ஹெர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1999க்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இதனிடையே மகளிர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார். அதிவேகமாக 3000 ரன்களை குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார். 76 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000 ரன்கள் எடுத்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார். இந்திய அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 88 போட்டிகளில் 3000 ரன்கள் எடுத்திருந்தார்.


Tags : Smriti Manthana ,Mitaliraj , Smriti Mandhana breaks Mithaliraj's record: 3000 runs in 76 ODIs is amazing..!
× RELATED வீரர்களுக்கு இணையான ஊதியம்; பெண்கள்...