எத்திராஜ் கல்லூரி முதல்வர் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை உடல்நலக்குறைவால் நேற்று மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். 25 ஆண்டுகள் எத்திராஜ் கல்லூரியில் பணியாற்றி, 2019ம் ஆண்டு முதல் கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்து மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்ற கோதையை இழந்து வாடும் குடும்பத்தினர், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Related Stories: