பிஎம் கேர்ஸ் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் நிதிய அறங்காவலராக  பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா  பரவல் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, கடந்த 2020ம் ஆண்டு  பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்ற நிதியத்தை ெதாடங்கினார். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள், நன்கொடைகள் அளித்து வருகிறார்கள். பிஎம் கேர்ஸ் மூலம் இதுவரை கொரோனாவில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வென்டிலேட்டர்கள், மருத்துவக்  கருவிகள், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் என ஏராளமான  உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அறங்காவலர் களாக உள்ளனர்.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்றுமுன் தினம் நடந்தது. இதில் புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்,  முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா, தொழிலதிபர் டாடா சன்ஸ் குழும  தலைவர் ரத்தன் டாடா ஆகியோர்  கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை இதுவரை செய்த பணிகள், நாட்டின் இக்கட்டான சூழலில் இருக்கும் போது செய்த பங்களிப்பு குறித்து உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். பிரதமர் மோடியும், பங்களிப்பு செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories: