லாரி மோதி விபத்து; சாலை தடுப்பில் தூங்கிய 4 பேர் பலி: டெல்லியில் பரிதாபம்

புதுடெல்லி: டெல்லியில் சீமாபுரியில் சாலை தடுப்பில் படுத்து தூங்கியவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் பலியானார்கள். டெல்லியின் சீமாபுரி பகுதியில் சாலை டிவைடரில் சிலர் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த லாரி ஒன்று தடுப்பில் மோதியுள்ளது. இந்த விபத்தில் தடுப்பில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் காயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த பகுதியில் இருந்த எடுக்கப்பட்ட சிசிடிவி  காட்சியில் நள்ளிரவு 1.51 மணிக்கு விபத்து நிகழ்ந்துள்ளது. தாறுமாறாக வந்த லாரி டிவைடரில் மோதிய பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Related Stories: