×

எல்லை பிரச்னையை தீர்க்க குழு: அசாம் - மிசோரம் முதல்வர்கள் முடிவு

புதுடெல்லி: இரு மாநில எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, பிராந்திய அளவிலான குழுவை அமைக்கலாம் என அசாம், மிசோரம் முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர். அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான முயற்சியை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்துள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்று இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 9ம் தேதி இருவரும் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், டெல்லியில் நேற்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், மிசோரம் முதல்வர் சோரம்தங்காவும் கலந்து கொண்டனர். இதில், இருமாநில  எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இரு மாநிலங்களுக்கு இடையே பிராந்திய அளவிலான குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.


Tags : Committee to resolve ,Assam ,Mizoram , Committee to resolve border issue: Assam-Mizoram CMs decide
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...