கட்சியின் வாழ்நாள் தலைவரா ஜெகன்? விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி:  ஒய்எஸ்ஆர் காங்கிரசின் நிரந்தர தலைவராக ஜெகன் மோகன் நியமிக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. ஆந்திர பிரதேச முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார்.  கடந்த  2011ம் ஆண்டு  காங்கிரசில் இருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  கட்சியை அவர் நிறுவினார். அன்றிலிருந்து தொடர்ந்து அவர் கட்சியின் தலைவராக  இருந்து வருகிறார். 2017ம் ஆண்டு இக்கட்சி தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கடந்த ஜூலை மாதம் குண்டூரில் நடந்த கட்சியின் மாநாட்டில், கட்சியின் வாழ்நாள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியானது. ஜெகனை தலைவராக தேர்ந்தெடுத்தது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு கட்சி சார்பில் தகவல் அனுப்பினர்.

ஆனால், ஜெகனை கட்சியின் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இந்த விஷயம் தொடர்பாக, முரண்பாடாக செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து, இதுகு றித்து விளக்கம் அளிக்கும்படி ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு  இதர கட்சிகளுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். எனவே, இதுகுறித்த சந்தேகங்களை போக்குவதற்கு  பொது அறிவிப்பை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெளியிட வேண்டும். அரசியல் அமைப்புகளில் உள்ள எந்த ஒரு பதவியும் நிரந்தரம் என்பதற்கு இடம் அளிக்கக்கூடாது. இது குறிப்பிட்ட இடைவெளியில் கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணைய  விதிகளை மீறிய செயலாகும்,’ என்று கூறியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் நடக்கும் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 5ம் தேதி நிறைவு பெறுகிறது. இதில் பங்கேற்க வரும்படி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனை நேற்று காலை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா, தலைமை செயல் அதிகாரி தர்மா மற்றும் திருப்பதி தொகுதி எம்எல்ஏ கருணாகர் ஆகியோர் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர். அப்போது, அவருக்கு ஏழுமலையான் கோயில் லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

Related Stories: