×

27ம் தேதி இறுதிச் சடங்கு சின்ஷோவுக்கு அரசு மரியாதை தர கூடாது: ஒருவர் தீக்குளிப்பு

டோக்கியோ: ஜப்பானில் கடந்த 2006 முதல் 2007 வரையும், பின்னர் 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில்  பிரதமராக இருந்தவர்  சின்ஷோ அபே ( 67). இந்நிலையில், ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபைக்கு நடந்த தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் கடந்த ஜூலை 8ம் தேதி நாரா ரயில் நிலையம் அருகே அவர் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் சுட்டு கொல்லப்பட்டர். இந்நிலையில், சின்ஷோவின்  இறுதிச் சடங்கு தலைநகர் டோக்கியோவில் வரும் 27ம் தேதி அரசு மரியாதையுடன் நடத்தப்பட உள்ளது. அவருக்கு அரசு மரியாதை அளிக்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி, தலைநகர் டோக்கியோவில் உள்ள சியோடாவில் பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் நேற்று தீக்குளித்தார். அவரை காப்பாற்ற சென்ற போலீஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Chinsho , 27th funeral Chinsho should not be honored by the government: one is cremated
× RELATED 27ம் தேதி இறுதிச் சடங்கு சின்ஷோவுக்கு...