ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் பழுது: புவி கண்காணிப்பு பணிகள் நிறுத்தம்

நியூயார்க்: அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் புவி கண்காணிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பூமியில் இருந்து 1.50 லட்சம் கி.மீ. தூரத்தில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இந்த தொலைநோக்கி இதுவரை காணாத வகையில் பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பியது. இந்நிலையில், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டுள்ள மிட் இன்ப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் (என்ஐஆர்ஐ) எனப்படும் கருவியில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.

நாசா விஞ்ஞானிகள் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எம்ஐஆர்ஐ கருவியில் நான்கு கண்காணிப்பு முறைகள் உள்ளன. இவற்றில் மீடியம் ரெசொல்யூசன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி கடந்த 24ம் தேதி அறிவியல் கண்காணிப்பு அமைப்பின் போது அதிகளவிலான உராய்வை காட்டியதாக நாசாக தெரிவித்துள்ளது. இதனை ஆராய்ந்து சரிசெய்ய கடந்த 6ம் தேதி நிபுணர் குழுவிடம் பரிந்துரைக்கப்பட்டது. இது சீரமைக்கப்படும் வரை தொலைநோக்கியின் புவி கண்காணிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

Related Stories: