×

சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயுதபூஜைக்கு 5,800 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: ஆயுதபூஜையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக 5,800 சிறப்பு பேருந்துகள் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர்  முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற தடப்பேருந்துகள், கீழ்கண்ட அட்டவணைபடி இயக்கப்படும்.

மேலும், இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளையும், பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகளையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எனவே, பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும்சிதம்பரம் வழி), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம்,  திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்) இயக்கப்படும்.

தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள். மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர்,சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பூவிருந்தவல்லி பைபாஸ் ( பூவிருந்தவல்லி) வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும்  திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

Tags : Chennai ,Ayudha Puja ,Transport Minister ,Sivashankar , 5,800 buses will operate from various places in Chennai for Ayudha Puja: Transport Minister Sivashankar informs
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...