×

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம்: மோடி சொன்னது சரிதான்!!! ஐ.நா-வில் புகழ்ந்து தள்ளிய பிரான்ஸ் அதிபர்

நியூயார்க்: ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி கூறியது சரிதான் என்று, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஐ.நா சபையில் பேசினார். உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்  பேசிய பிரதமர் மோடி, ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் போர் குறித்து தனது  கவலைகளை வெளிப்படுத்தினார். அப்போது, ‘போருக்கான நேரம் இதுவல்ல’ என்றும்  கூறினார்.

இதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘உக்ரைன்  பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு எங்களுக்கு தெரியும். இப்பிரச்னை  விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம்’  என்றார். பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் அழுத்தமாக தனது கருத்தை வெளிப்படுத்தியதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வரவேற்றன. இந்நிலையில்  நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ‘ரஷ்யா - உக்ரைன் இடையிலான போருக்கான நேரம் இதுவல்ல என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியது சரிதான்.

இது மேற்கு நாடுகளை பழிவாங்கவோ அல்லது கிழக்கு நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகளை எதிர்ப்பதற்கோ அல்ல. சர்வதேச நாடுகளின் இறையாண்மைக்கானது. அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள சவால்களை ஒன்றாக இணைந்து சமாளிக்க வேண்டும்’ என்று கூறினார்.


Tags : Russia ,Ukraine ,Modi ,GI ,france , Russia-Ukraine war issue, Modi was right, French President praised in UN
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...